Thursday, August 25, 2011



உன்னை மறக்க நினைக்கும் 
ஒவ்வொரு நொடியும் 
உனைத் தேடும் 
என் - காதல் 
ஆயுள் வரை நீள்கிறது..



என் வார்த்தை என்ற
சாவி கொண்டு
உன் மௌனத்தை
திறந்த போதுதான்
தெரிந்து கொண்டேன்
நீ - இதயமில்லதவள்
என..

உயிரே
உன்னை நினைக்கும் தருணம்
என்னுள் ஏதோ ஒரு கனம்
எனக்குள் உன்னைப்பற்றிய
எண்ணங்களுடன் ஒரு
போராட்டம்
உன்னிடம் பேச
வாய்ப்புகள் வந்தால்
ஏனோ என் வார்த்தைகள்
வலுவிலந்துவிடுகிறது



என் கனவுகளின்
உயிர்வாங்கி நீ
நிஜமாக நான் உன்னை
நெருங்க - நீ
என்னை நிழலாக்கி விட்டாய் 

Saturday, August 13, 2011



உதடுகள் பிளந்து
உணர்வுகளை உருக்கி
மொழிவரும்
வேளை உன் காதலை
ஊமையக்கிவிட்டாய்......!

என் உள்ளச்
சிறைகளில்
சிறைவைக்கப்பட்ட
உன் நினைவுகள்
இன்று உணர்வுகளோடு
உரசும் தருணம்,
கண்களில் கண்ணீர்
துளிகள்

Friday, August 12, 2011

நிஜங்களை
கடந்த
நிழல்கள் போல,
உன்
உணர்வுகளை
சிறைபிடித்த
எனக்கு,
உன் காதலை
கைபிடிக்க
கைகூடவில்லை.
உனக்கான
உன் எண்ணங்கள்
இன்று
என்னை ஆட்சிசெய்ய,
நான்
நடைபிணமாய்
வாழ்கிறேன்....!
நித்தம்
என் கனவுக்குள்
உன் காதல்
போராட்டம்
உனக்கான
என் எண்ணங்கள்
என்னும்
இதயச்சிறையில்..!
உன்னை சந்திக்கும் 
ஒவ்வொரு நிமிடமும் 
என் காதல் உணர்வை 
உனக்குள்
பரிமாற்ற நினைத்தேன்,
தொடக்கதிற்க்கும் - முடிவிற்கும் 
இன்றி நிறுத்தப்படது 
என் காதல்!
உன்னை நினைக்க
உள்ளம் தோறும்
கனவுகள்,
உனக்கான எண்ணங்கள் 
அனைத்தும்,
என்னுடன் 
ஆரம்பம் ஆகி 
என்னுடன் முடிவடைய 
வேண்டும்.
ஒரு மனிதனைத் தாக்கும்
மிகப் பெரிய ஆயுதம்,
அவனுக்கு பிடித்த
ஒருவரின் மொளனம்தான்
பேனாயில்லா
நேரம் வந்து விழும்
கவிதையாய்
வெளிப்படாமலே
போனதடி
என் காதல்

Tuesday, August 9, 2011

என்னைக் கேட்டு காதல் வரவில்லை ,
நான் சொல்லி காதல் பிரியவில்லை,
நீ மறந்தாலும் என் காதல் மறையாது,
நீ இறந்தாலும் என் காதல் இறக்காது,

நான் வாழும் வரை என் காதல்
உனக்கே......
உயிரே.........

Monday, August 8, 2011

மணல் போன்ற
என் மனதில்
ஆயிரம் பெயர்களை
எழுதி அழித்திருப்பேன்
அவள்  பெயரை மட்டும்
அழிக்க முடியாமல்
அவதிப்படுகிறேன்....
அன்பே
தூரத்தில் நீ இருந்தாலும் 
என் பார்வை உன்னை
துரத்திக்கொண்டுதான்
இருக்கும்
என் இருதயத்தின்
இறுதித் துடிப்பு 
நிற்கும்வரை..
அரங்கேற்றப்படாத
என் காதல்...

உன் நினனவால்
எந்தன் உணர்வுக்கு
ஓர் முடக்கம்......

Sunday, August 7, 2011

எனக்கான மௌனக்
கலைப்பு
உனக்கான தேடல்கள்
இன் ஒருவனிடம்
என்றபோதும்
எனக்கான
உன் தேடல்கள்
தொடர்ந்த வண்ணம்
உள்ளது......
இளைத்துப் போகும்
உணர்வுகளும்
களைத்துப் போகும்
கனவுகளும்....


உன்
விழிப்பார்வையில்
உயிர்
பெறுகின்றது..... 
உன்னை என்றும்
வெறுக்காத
உன் உயிர்...

என் கனவுகளோடு
தினமும் ஓர்
போராட்டம்...
உன் மனதில்
என் எண்ணங்கள்
என்றும் இடிந்த
கட்டடத்தின் எச்சங்களாய்
மட்டும்..........
தெருவோர மூலைஎல்லாம்
தேடிப்பார்க்கிறேன்
என் தொலைந்த காதலை......
கனவுகள் கூட 
கணக்கிறது 
நீ இல்லாத போது...
மரணிக்க நினைக்ககும்
போதேல்லாம்
வாழவைப்பது உன்நினைவுகள்


வாழ்கின்ற ஒவ்வொரு 
தருணங்களையும் 
உருகவைப்பது - என்
உணர்வுகள்..
எப்பொழுதும் 
பார்வைகளை 
வீசிவிட்டு 
வார்த்தைகளை
 தரமறுகிராய்......