Wednesday, July 20, 2011

உன்னை
எந்த அளவுக்கு
பிடிக்கும் எனறு எனக்கு
தெரியவில்லை…
ஆனால்!
உன்னை பிடித்த அளவுக்கு
இந்த உலகத்தில்
வேறு எதுவும்
எனக்கு பிடிக்கவில்லை.
என்னவளே......
என் அன்பே
உன் விழி,
பேசும் மொழி
பலருக்கு
புதிராக இருக்கலாம்
அதுதான் எனக்கு
உயிராக இருக்கிறதடி. . . . . . . . 
மரணமே வந்தாலும்
உன்னை
மறக்காத இதயம்
வேண்டும்.

ஜனனம் ஒன்று இருந்தால்
அதில்
நீயே வேண்டும்
உறவாக
அல்ல,
உயிராக...
பெண்னே!

உன்னை என் இதயம்
என்று சொல்ல மாட்டேன்.?
ஏன் தெரியுமா.?
உன்னை துடிக்க விடடு
உயிர் வாழ எனக்கு
விருபபம் இல்லை.



சுவாசிக்க மறந்தேன்
உன்
“நினைவால்”
சுவாசத்தையே மறந்தேன்
உன் “பிரிவால்”….



யாருடன் வாழ முடியுமோ
அவர்களை நேசிப்பதை விட…
யார் இல்லாமல் வாழ முடியாதோ
அவர்களை அதிகமாக நேசியுங்கள்…

Tuesday, July 19, 2011

அன்பே. . . . . .!
உனக்கு தெரியுமா 
கவிதைகள் தான் எனக்கு 
முதல் எதிரி,

ஏனெனில்
எழுதுவது நான், 
ஆனால் பேசுவதெல்லாம் 
உன்னைப்பற்றி. ..
நான்!
உன்னை நினைத்து
எழுதிய கவிதைகளை
மனசுக்குள் படித்து,
ரசித்துக்கொண்டிருக்கும் 
போதுதான் தெரிகிறது, 
நீயும்! 
என் கவிதை என்று. . . . 
காதலின் வேதனை பலருக்கு
புரிவதில்லை,
காதலே ஒரு சாதனை அது பலருக்கு
தெரிவதில்லை. . . . .
வார்த்தை பூக்கள் பூத்தன 
ஆயிரம் என் மனதில் 
கோர்த்து வைத்து தேடினேன் உன்னை 
அருகினில் நீ வந்த போது 
நாணம் தடுத்தது மாலையிட
வெட்கப்பட்டு உனக்கு சூடாமலே
காய்ந்து கிடக்கிறது
பல வார்த்தை மாலைகள்
என் மன தோட்டத்தில்.....
காத்திருக்க காத்திருக்க தான் 
உன்னை பிரிந்திருக்கும் வலியை உணர்கிறேன்,
சில நாட்கள் காக்க வைத்தாய் விளையாட்டாக‌ 
அப்பொழுதும் அறியவில்லை, - நீ 
என்னை நிரந்தரமாக பிரிய வைக்கும் 
பரிட்ஷை என்று,
பிரித்துச்சென்ற‌ காலனுக்கும் புரியவில்லை
என் மனக்கவலை....

நினைவுகள் 

உன் நினைவுகள் என்னை 
தின்று கொண்டிருக்கும் வரை 
நான் உன்னை மறப்பதில்லை 
என் உயிர் மூச்சு பிரியும் வரை 
உன் நினைவுகள் என்னை விட்டு 
விலகுவதுமில்லை....
பெண்னே உன் கை கோர்த்து 
கதைகள் பேசியா!!
 நினைவுகளே நான் உயிர் வாழ 
மைல் கற்கள்..
இளம் காற்று வீசும் 
அந்தி மாலை பொழுதில்
என்னவளே உன் வருகைக்காக
காத்திருந்த அந்த வேளையில் 
என்னை வருடிய உன் நினைவுகள்!!!


என் வாழ்க்கை புத்தகத்தில்
உன் பெயர் எழுதிய தாள்களை
கிழித்து ஏறிய முயல்கிறேன் 
இதற்காவது உதவி செய்.

பெண்ணே........




நீ விட்டு சென்ற நினைவுகள் 
நெஞ்சில் நிலைக்கும்....
உன் பிரிவுகள் தினம் தினம் 
என்னை உருக்கும்.......
நினைவு சின்னம்!!

என் இதயம் எனும் நாட்டில்,
உன் நினைவுகள் என்னும் கற்கள் கொண்டு
நாம் காதலுக்கு சின்னம் ஓன்று கட்டுகின்றேன்...!
பெண்ணே ....!
உன்னை என் இதயம் என்னும் 
அரண்மனையில் வைத்த,
காரணத்திற்காகவா.......

என்னை !
உன் நினைவுகள்
என்னும் ஆயுதம் கொண்டு ,
என் இதயத்தை தாக்குதல் செய்கின்றாய்.....



மறக்க முடியாத உன் நினைவுகள்
நான் தூங்கும் போது என்
கண்ணைத் தூங்க விடாமல்
கலங்க வைக்கிறது

இருந்தும் என் கண்கள்
உன் நினைவுகளை
சுமக்கவே தயாராகி விட்டது!!
என் இதயத்தில் மட்டும் ஏன் ? 
நீ 
நடந்த புல்வெளிகளுக்கு 
எந்த 
வலியும் இல்லை...
உன்
பாதங்கள் ஒத்தடம்
கொடுத்து போனதோ...?
பின்
என் இதயத்தில் மட்டும்
ஏன்
இப்படி
ஒரு 
ரணவேதனை........?
என் உயிரே 
மயக்கத்திலாழ்ந்து.... 
மதி இழந்து 
வாழ்வை இழந்து
போன வாழ்வை
எண்ணி வருந்தி
நிம்மதி இன்றி
நித்தமும் மறக்க முடியாமல்
நினைக்க வைக்கும் நினைவே
உனக்கு பெயர் தான்
காதலோ??


ஏதுமில்லை
என்னிடம் உனக்காக தர
அன்பை ஒன்றை தவிர
என் அன்பையும்
என் காதலையும்
உன் இதயத்தோடு
பத்திரமாய் வைத்துகொள்
என் உயிரே..




என்னிடம் உன்னை வர்ணிக்க 
எத்தனை வார்த்தைகள் இருக்கிறதோ
அத்தனையையும் கவியாகி 
காற்றிலே அனுப்புவேன் 
உன் பாதங்களுக்கு .........

நான் உன்னை காதலிக்கிறேன் 
என்ற வார்த்தைக்குள் மட்டும், 
அடங்கிவிடாது எனது காதல். 

மொழியையும் 
தாண்டிய இதயத்தின் 
உணர்வு பெண்ணே...

ஒரு ஆண் தான் 
ஒரு பெண்ணின் 
முதல் காதலனாக
இருக்க விரும்புகிறான்...

பெண்ணோ 
ஒரு ஆண்ணின் 
கடைசிக் காதலாக
இருக்க விரும்புகிறாள்...

உன் அழகின் மீது
சினம் கொண்ட நிலவு
கடலில் !!
தன்னை
மாய்த்துக் கொள்ள 
விழுந்தது

காதல் என்னும் மூன்று எழுத்து 
வார்த்தையின் அர்த்தத்தை........

நான்கு எழுத்து (முத்தம்) 
எனும் முத்தத்தால் 
புரிய வைத்தாய்..... 
பெண்ணே!!!